இலங்கை தொடர்: மீண்டும் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோஹ்லி

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை குவித்து மீண்டும் ஒரு மைல்கல்லை விராட் கோஹ்லி எட்டியுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

இப்போட்டியில், இந்திய அணித் தலைவர் கோஹ்லி அரைசதமடித்து விளையாடி வருகிறார். அவர் 25 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 5000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதையடுத்து மைதானத்தின் பெரிய திரையில் விராட் கோஹ்லி 5000 ஓட்டங்கள் எடுத்தார் என காட்டப்பட ரசிகர்கள் பெரிதாக சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.

இதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய 11-வது இந்தியர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றதுடன் தனது சாதனைகளை விடாமல் துரத்தும் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லாவையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்