புதிய சாதனை படைத்த புஜாரா

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வீரர் புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது, முதலில் பேட்டிங் செய்த முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ஓட்டங்களும் இலங்கை அணி 294 ஓட்டங்களும் எடுத்தது.

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்து, 49 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இப்போட்டியில் இந்திய வீரர் புஜாரா, நான்கு நாட்களும் பேட்டிங் செய்து விட்டார், இந்நிலையில் இன்றைய 5வது நாள் போட்டியிலும் களமிறங்கிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக சர்வதேச அரங்கில் இதுவரை 8 வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரி உள்ளிட்ட இரண்டு இந்தியர்கள் அடங்குவர்.

இவர்களை தவிர, இங்கிலாந்து அணியின் ஜெப் பாய்காட், ஆலான் லம்ப், பிளிண்ட்டாப், ஆஸ்திரேலியாவின் கிம் ஹியூஸ், வெஸ்ட் இண்டீசின் அட்ரைன் கிரிபித், தென் ஆப்ரிக்காவின் ஆல்விரோ பீட்டர்சன் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்