இந்தியா தொடர்: 16 ஆண்டு சாதனையை தகர்த்து இலங்கை வீரர் புதிய உலக சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கையின் சுரங்கா லக்மல் அபூர்வ உலக சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கடுமையான மழை காரணமாக இப்போட்டியில் மொத்தமாகவே, இரண்டு நாட்களிலும் சேர்த்து 32.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

இதில் முதல்நாளில் 6 ஓவர்கள் வீசிய இலங்கை வீரர் லக்மல் ஒரு ஓட்டம் கூட விட்டுக் கொடுக்கவில்லை.

இரண்டாம் நாள் தொடர்ந்து பந்து வீசிய லக்மல் தனது 47வது பந்தில் தான் முதல் ஓட்டத்தை விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் முதல் ஓட்டத்தை விட்டுக்கொடுக்கும் முன் அதிக பந்துகளை கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை லக்மல் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2001-ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெய்லர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 40 பந்துகள் வரை கட்டுபடுத்தியதே சாதனையாக இருந்த நிலையில் லக்மல் அதை முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்