இலங்கை அணியை எதிர்வரும் போட்டியில் எளிதாக எடைபோட முடியாது என இந்திய அணியின் துணை தலைவர் அஜிங்க்ய ரஹானே கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் துணை தலைவர் ரஹானே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், இலங்கையில் விளையாடிய தொடரும், தற்போது இந்தியாவில் விளையாடவுள்ள தொடரும் முற்றிலும் வேறுபட்டதாகும்.
அந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், தற்போதைய இலங்கை அணியை எளிதாக எடைபோடவில்லை.
இந்த தொடரை பொறுத்த வரை இலங்கைக்கும் இது முக்கிய தொடராகும், அவர்களும் நல்ல முறையில் தயாராகி வருகிறார்கள்.
இருப்பினும் அவர்கள் வியூகங்கள் பற்றி கவலைப்படாமல் எங்கள் பலத்தில் மட்டும் கவனம் செலுத்தி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதையே இலக்காக வைத்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.