பயிற்சி போட்டியில் ஓட்டங்கள் குவித்த இலங்கை: அரைசதம் கடந்த வீரர்கள்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், ஒருநாள், டுவென்டி-20 கொண்டதொடரில் பங்கேற்கிறது.

வரும் 16 ஆம் திகதி கொல்கத்தாவில் போட்டி தொடங்கவிருக்கிறது. இப்போட்டிக்கு முன், இலங்கை அணி இந்திய கிரிக்கெட் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியுடன் மோதும் பயிற்சி(2 நாள்) போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவுசெய்தது. இலங்கை அணியில் சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

இந்திய பந்துவீச்சை சிறப்பாக கையாண்ட இருவரும் அரைசதம் அடித்தனர், கருணாரத்னே(50), சமரவிக்ரமா(75) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சண்டிமால்(29), நிதானமாக விளையாடிய மேத்யூஸ்(54) அரைசதம் கடந்தார்.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிக்வெல்லா (73), ரோஷன் சில்வா(36) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய லெவன் அணி சார்பில் அதிகபட்சமாக சந்தீப், ஆகாஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்