டோனியின் சிஷ்யன் நான்.. அணிக்கு திரும்புவேன்! சுரேஷ் ரெய்னா

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயம் மீண்டும் இடம்பெறுவேன் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருப்பவர் சுரேஷ் ரெய்னா, பல்வேறு காரணங்களால் கடந்த 2 வருடங்களாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

advertisement

இலங்கை, அவுஸ்திரேலியா தொடர்களில் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யோ யோ உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்து அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார்.

இதுகுறித்து ரெய்னா கூறுகையில், அணியில் இடம்பெற கடுமையாக உழைத்து வருகிறேன், நிச்சயம் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

வாழ்க்கையில் முடியாது என்பது எதுவுமில்லை, இதை டோனியிடம் ஆரம்பகாலத்தில் கற்றுக் கொண்டேன்.

நான் டோனியின் சிஷ்யன், இந்த கடினமான நிலையை நான் கடக்க ஏற்றார்போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை விலகிவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்