இந்திய அணியின் மோசமான காலம் எது?

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியின் மோசமான காலகட்டம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2006 - 2007 வரையிலான காலகட்டம் இந்தியாவிற்கு மிகவும் மோசமானதாக இருந்தது.

இந்திய அணி, கடந்த 2007 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்தது.

இதனால், உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல், இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியது.

இந்த தோல்வியிலிருந்து மீண்டுவர மிகவும் ஒற்றுமையுடன் உழைத்தோம், அணியில் அதிக மாற்றங்கள் வரத்தொடங்கின. மாற்றங்கள்அனைத்தும் ஒரே இரவில் நடந்துவிடவில்லை.

உலககோப்பையை கையில் பெறுவதற்காக நான் 21 ஆண்டுகள் காத்திருந்தேன்என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்