பிரபல கிரிக்கெட் வீராங்கனை மரணம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
377Shares
377Shares
lankasrimarket.com

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஜேன் பிரிட்டின் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்காகவும், Surrey உள்ளூர் அணிக்காகவும் கடந்த 1979லிருந்து 1998ஆம் ஆண்டு வரை விளையாடியவர் ஜேன் பிரிட்டின் (58).

27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரிட்டின் 1935 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் ஐந்து சதங்களும் அடங்கும்.

63 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2121 ஓட்டங்களை குவித்துள்ளார். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியில் பிரிட்டினின் பங்கு பெரிதாக இருந்துள்ளது.

புற்றுநோயால் அவதிப்பட்டிருந்த பிரிட்டினின் உயிர் நேற்று பிரிந்தது. அவரின் மறைவுக்கு கிரிக்கெட் உலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் Surrey உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் Rainford-Brent கூறுகையில், பிரிட்டின் பலருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தவர். பெண் கிரிக்கெட் வீராங்கனைகளில் மிக சிறந்தவர்களில் ஒருவராக வலம் வந்தார்.

பிரிட்டினின் குடும்பத்தாருக்கு Surrey கவுண்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்