டோனி அல்லது கோஹ்லியை சேர்த்திருக்கலாம்: பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி

Report Print Santhan in கிரிக்கெட்
966Shares
966Shares
lankasrimarket.com

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் அணி எவ்வளவு கெஞ்சியும் இதுவரை அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல எந்த ஒரு கிரிக்கெட் அணியும் முன்வரவில்லை.

இந்நிலையில், ஐசிசி.,யின் முயற்சியால், தற்போது, நீண்ட இடைவேளைக்கு பின், பாகிஸ்தான் - ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் உலக லெவன் அணியை வீழ்த்தியது.

உண்மையை கூற வேண்டுமென்றால் உலக லெவன் அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த வீரர்கள் இல்லை.

குறிப்பாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோஹ்லி, டோனி இல்லாதது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

அதில், அவர்கள் இந்திய அணி வீர்ர்களான கோஹ்லி அல்லது டோனியையாவது உலக லெவன் அணியில் சேர்த்த்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்