அணியில் இடம் இல்லை: ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஜடேஜா

Report Print Santhan in கிரிக்கெட்
730Shares
730Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடன் மோதும் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பி.சி.சி.ஐ யை மறைமுகமாக சாடியுள்ளார்.

அதில், உங்கள் தோல்வியின் சத்ததை விட வெற்றியின் சத்தம் அதிகமாக இருக்க வேண்டும் என பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆனால் ஜடேஜா பதிவேற்றம் செய்த சில மணி நேரங்களில் அதை டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 17-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்