முடிந்தால் அவுட்டாக்கி பார்: ஜான்சனின் வாயை மூடிய ஆண்டர்சன்

Report Print Santhan in கிரிக்கெட்
250Shares
250Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவது போன்று இருக்கும்.

இரு அணி வீரர்களும் அப்போட்டியில் தங்கள் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தி ஆடுவர், இதன் காரணமாக தொடரின் போது சண்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது, அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சனுக்கும், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

அப்போது களத்தில் துடுப்பெடுத்து ஆடிக் கொண்டிருந்த ஜான்சன் முடிந்தால், இந்த விக்கெட்டை வீழ்த்து என்று கூறுவார்.

ஆண்டர்சன் அதே போன்று அடுத்த பந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரரை துல்லியமான முறையில் போல்டாக்கி வெளியேற்றுவார். விக்கெட் வீழ்ந்தவுடன் ஆண்டர் வாயை மூடு என்பது போல் செய்கை காட்டுவார்.

2015-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்