சென்னையில் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்க ஓர் வாய்ப்பு

Report Print Santhan in கிரிக்கெட்
323Shares
323Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 17-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது, இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று துவங்கியது.

இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக டிக்கெட் விற்பனை துவங்கியது, குறைந்த விலை டிக்கெட்டான 1,200 ரூபாய் மற்றும் 4,800- ரூபாய்க்கான் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 8 ஆயிரம் மற்றும் 12 ஆயிரம் விலையில் உள்ள டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

அதன்படி அவுஸ்திரேலிய- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் வரும் 12-ஆம் திகதி நடக்கிறது.

காலை 10 மணிக்கு துவங்கும் இப்போட்டியை, ரசிகர்கள் இலவசமாக காணலாம் எனவும் இவர்கள் சி, டி மற்றும் இ ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் அமர்ந்து ரசிகர்கள் பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்