ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்
1081Shares
1081Shares
lankasrimarket.com

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு ஒன்பதாவது இடமும், டோனிக்கு பத்தாவது இடமும் பட்டியலில் கிடைத்துள்ளது.

பந்து வீச்சாளர்களில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாஸ்லேவுட் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தயீர் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இலங்கை அணி வீரர் ஏஞ்சலா மேத்யூஸ் நான்காவது இடத்தில் உள்ளார்.

சிறந்த அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இலங்கைக்கு பட்டியலில் எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்