பேட்டிங், பவுலிங், பீல்டிங் எதையுமே சரியாக செய்யவில்லை: மனம் கலங்கிய தரங்கா

Report Print Raju Raju in கிரிக்கெட்
914Shares
914Shares
lankasrimarket.com

துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என எதிலுமே நாங்கள் சிறப்பாக செயல்ப்படவில்லை என இலங்கை தலைவர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

படுதோல்வியடைந்துள்ள இலங்கை அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தோல்விக்கு பின்னர் பேசிய அந்த அணியின் தலைவர் உபுல் தரங்கா, துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டு விட்டோம்.

இந்திய அணி எல்லாவாற்றிலும் சீராக இருந்ததோடு அந்த அணியின் தொடக்க வீரர்கள் அதிமாக ஓட்டங்களை குவித்தார்கள்.

நாங்கள் அதிகளவிலான தவறுகளை செய்துவிட்டோம். நடந்து முடிந்த ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இலங்கை அணி 250 ஓட்டங்களை எடுக்கவில்லை.

நேற்றைய போட்டியில் 275 ஓட்டங்கள் எடுக்கமுடியும் என நினைத்த நிலையில், 53 ஓட்டங்களில் 7 விக்கெட்களை இழந்தோம்.

எங்களின் எல்லா தவறுகளையும் விரைவில் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.

இலங்கை அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என கேட்கிறீர்கள். அதற்கான சூழலும், காரணமும் தற்போது இல்லை.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அணியின் தெரிவாளர்கள் தான் முடிவு செய்வார்கள் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்