இந்திய அணியில் இந்த இரண்டு வீரர்கள் இல்லை: தேர்வு குழவின் மீது ஆத்திரத்தில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ்சிங் மற்றும் ரெய்னா இடம் பெறவில்லை. கடினமாக உழைத்து கொண்டிருக்கும் சுரேஷ் ரெய்னா, அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுமாராக விளையாடிய யுவராஜ் சிங்குக்கும் அணியில் இடம் கிடைக்காததால், ரசிகர்கள் தேர்வாளர்கள் மீது தங்கள் ஆத்திரத்தை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதில் ஒருவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் சிங் சிறப்பாக தான் விளையாடினார், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது, ஏன் அவரை தெரிவு செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.

மேலும் ஒருவர் யுவராஜ், ரெய்னாவை விட கிதர் ஜாதவ், ரகானே, பாண்டே போன்றோர் சிறப்பாக விளையாடுகின்றனரா, நான்சன்ஸ் தேர்வாளர்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதே போன்று பலரும் பிசிசிஐ டுவிட்டர் பக்கத்திற்கு யுவராஜ், ரெய்னாவை ஏன் தெரிவு செய்யவில்லை என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால் இந்திய அணியை அறிவித்தவுடன் டுவிட்டரே கதிகலங்கி போயுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்