டோனிக்கு நிச்சயம் அந்த தகுதி உள்ளது: பிரபல வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

2019ல் நடக்கவிருக்கும் ஐசிசி உலக கிண்ண போட்டிகளில் பங்கேற்க டோனிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என மைக்கேல் ஹசி கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹசி ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

சூதாட்ட புகார் தடைக்கு பின்னர் இரண்டாண்டு கழித்து சென்னை அணி அடுத்த வருடம் களமிறங்கவுள்ளது.

இதுகுறித்து ஹசி கூறுகையில், சென்னை அணி வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு சென்று விட்ட நிலையில் அணியை மீண்டும் கட்டி எழுப்புவது சவாலான விடயம் தான்.

ஆனால் சென்னை அணி மீண்டும் எழும், அந்த அணியின் பயிற்சியாளர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்பேன் என கூறியுள்ளார்.

மேலும், டோனியுடன் நல்ல நட்பு இருப்பதாக கூறிய ஹசி, அடுத்த உலக கிண்ண போட்டிகளில் பங்கேற்க டோனிக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்