இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டம்

Report Print Santhan in கிரிக்கெட்
295Shares
295Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் கோஹ்லி பேட்டிங்கை தெரிவு செய்தார்.

இந்திய அணியின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இலங்கையின் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், இந்திய அணியின் எண்ணிக்கை சீராக சென்று கொண்டிருந்தது.

50 ஓட்டங்களை தொட்ட இந்தியா, 17.4 ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டது. தவான் 45 பந்திலும் லோகேஷ் ராகுல் 67 பந்திலும் அரைசதம் கடந்தனர்.

முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் சேர்த்தது.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்திய அணியின் 39.3 ஓவரில் 188 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. லோகேஷ் ராகுல் 85 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் புஷ்பகுமாரா பந்தில் ஆட்டமிழந்தார்.

தவான் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தவான் 107 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்த புஜாரா 8 ஓட்டங்களில் வெளியேறினார். அதன்பின் ரகானே (17), விராட் கோஹ்லி (42) அஸ்வின்(31) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியாக இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்தது. சகா 13 ஓட்டங்களுடனும், பாண்ட்யா 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சண்டகான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்