இலங்கை டெஸ்ட்: இந்திய வீரர் நிகழ்த்தியுள்ள வரலாற்று சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து 7 முறை அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ராகுல் படைத்துள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைப்பெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தெரிவு செய்த இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்திய வீரர்கள் ஷிகர்தவான், ராகுல் ஆகியோர் அரை சதம் அடித்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டியில் ராகுல் விளாசிய அரை சதம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர் கிரிஸ் ரோஜர்ஸ் இதே சாதனையை செய்துள்ள நிலையில் ராகுல் அதை சமன் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்