வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இலங்கையுடன் இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியை வென்றால் அது இந்திய அணிக்கு வரலாற்று சாதனையாக அமையவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 85 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஆனால் வெளிநாட்டு மண்ணில் ஒரு போதும் 3 மற்றும் அதற்கு மேல் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர்களை இந்தியா முழுமையாக வென்றதில்லை.

இதை மாற்ற இன்று ஒரு வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. அதாவது இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இதையும் இந்தியா வென்றால் அது புதிய வரலாற்று சாதனையாக அமையும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்