இலங்கைவுடனான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வா? கோஹ்லியின் அதிகாரப்பூர்வ பதில்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கைவுடனான டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணித்தலைவர் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படும் என வெளியான தகவல் குறித்து கோஹ்லியே விளக்கமளித்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இன்று கடைசி டெஸ்ட நடைபெறவுள்ள நிலையில் இலங்கைவுடனான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணித்தலைவர் கோஹ்லி விளக்கமளித்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாட தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கோஹ்லி கூறியுள்ளார்.

மேலும், யார் சொன்னர்கள் நான் விளையாடமட்டேன் என கேள்வி எழுப்பிய கோஹ்லி. யாரிடம் இருந்து இந்த தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை, ஆனால், இலங்கையுடன் ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் கண்டிப்பாக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்