பெண்களை பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட் வாரியம்: ஏன் என்று விளக்கம்?

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் திகதி நடைபெற உள்ளது.

சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ள இலங்கை அணி, கடைசி டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் முடிக்க முயற்சி எடுக்கும்.

advertisement

கடந்த சில மாதங்களாகவே இலங்கை அணிக்கு அடி மேல் அடி தான், என்று கூறவேண்டும்.

அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்காவுடன் ஒருநாள் தொடர் மற்றும் கத்துக் குட்டி அணியான ஜிம்பாப்வே அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது என்று, இலங்கை அணிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுகிறது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போட்டியின் இடைவெளியின் போது வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

ஏற்கனவே பலத்த காயத்தில் இருக்கும் இலங்கை அணியை உற்சாகமாக இருக்க வைக்க இம்முயற்ச்சி மேற்கொள்ள பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது மைதானம் பார்பதற்கு ஆழகாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே இது போன்ற முயற்சியில் இறங்கியிள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது முதன் முறையாக அல்ல. இதற்கு முன்னர் 1938-ஆம் ஆண்டு ஹெட்டிங்லீயில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியிலும் தேநீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது இங்கிலாந்து என சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்