டிவில்லியர்ஸ் இப்படி பண்ணலாமா? புலம்பிய கிப்ஸ்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் அண்மையில், அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெற போகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சாதிக்க நீண்ட கிரிக்கெட் தொடரான டெஸ்ட் போட்டி தடையாக இருந்து வருவதாக டிவில்லியர்ஸ் கருதுவதாகவும், இதனால் தற்போது வரை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை அவர் புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை மோசமாக இழந்தது. இதற்கு டிவிலியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டுபிளசி தெரிவித்தார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான கிப்ஸ் இப்படி ஒரு வீரரை நம்பி ஒரு அணி உள்ளது என தலைவர் தெரிவிப்பதை நான் முதல்முறையாக பார்க்கிறேன்.

அணிக்கு மரியாதை தராத ஒரு வீரரை நான் இது வரை பார்த்ததே இல்லை. அதே போல் டிவிலியர்ஸ் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்