பாண்ட்யா ஒன்னும் பென் ஸ்டோக்ஸ் இல்லை: கோஹ்லியை நோஸ் கட் செய்த காம்பீர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, பாண்ட்யா இதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இங்கிலாந்து அணியில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ் போன்று வருவார் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து இந்திய அணியின் துவக்க வீரரான கவுதம் காம்பீர் கூறுகையில், பாண்ட்யா இன்னும் நிறைய மேம்பட வேண்டியுள்ளது. அவரது துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் தேவை.

தற்போது அவரால் அடித்து ஆட முடிவதற்கு காரணம் டாப் 3 துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவித்து விடுகின்றனர். அதனால் களத்தில் இறங்கி அடித்து ஆட முடிகிறது.

ஆனால் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க வேண்டும் எனில் உத்தியை இன்னும் மேம்படுத்த வேண்டும். 2 அல்லது 3 விக்கெட்டுகள் விரைவில் விழுந்து அணி நெருக்கடிக்குள்ளாகும் போது அவர் துடுப்பாட்டத்தில் இன்னும் கூடுதல் திடத்தன்மை தேவை.

இப்போதைக்கு என்னைப் பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் இடத்திலெல்லாம் அவர் இல்லை. அணியில் அவர் ஒரு அதிரடி வீரராக இருக்கலாம். அதே வேளையில் உருப்படியான உத்தி தேவை.

இப்போதைக்கு அவர் ஆடமுடிவதற்கான சூழல் இருப்பதால் ஆடும் இன்னிங்ஸ்களை வைத்து ஒரேயடியாக நாம் அந்த இடத்துக்கு அவரை ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்