ஸ்மார்ட் கடிகார விற்பனையில் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasri.com

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவைத் தொடர்ந்து அறிமுகமான ஸ்மார்ட் கடிகாரங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கின்றது.

சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் திகழ்கின்றன.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டில் மேற்கொண்ட ஸமார்ட் கடிகார விற்பனை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி சுமார் 18 மில்லியன் கடிகாரங்களை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது 2016ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் கடிகாரங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க 54 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில் தனது கடிகாரங்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளின் எண்ணிக்கையை ஆப்பிள் நிறுவனம் மேலும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்