சுவிஸ் நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவில் இறால் வளர்ப்பு

Report Print Fathima Fathima in நிறுவனம்
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்தின் கூப் கூட்டுறவு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்திய கடல் பொருட்கள் ஏற்று­மதி மேம்­பாட்டு ஆணையம் இறால் வளர்க்க முடிவு செய்துள்ளது.

ஐரோப்பாவில் இயற்கை முறையில் வளர்க்கப்படும் இறால்களுக்கு மவுசு அதிகம் என்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இங்கு உற்பத்தியாகும் இறால்களை கூப் நிறுவனம் கொள்முதல் செய்து கொள்ளும் என ஆணையத்தின் தலைவர் ஜெயதிலக் கூறியுள்ளார்.

மேலும் விவசாயிகளை ஈர்க்க 15 சதவிகிதம் வரை கூடுதல் விலையில் கொள்முதல் செய்யவும், பயிற்சியுடன், இறால் பண்ணைக்கான நிதியுதவி மூலம் கூடுதலாக 5 சதவீத தொகை வழங்கவும், கூப் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்