அமேஷான் நிறுவனத்தின் அதிரடி சலுகை: அனுபவிக்க நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasri.com

உலகப் பிரபல்யம் பெற்ற அமேஷான் நிறுவனம் ஒன்லைன் வியாபாரம் தவிர்ந்த ஏனைய சில சேவைகளையும் வழங்கி வருகின்றது.

இவற்றுள் மியூசிக் சேவையும் ஒன்றாகும். அதாவது ஒன்லைனில் பல்வேறு மொழிகளினாலான பாடல்களை கேட்டு மகிழ முடியும்.

Black Friday தினத்தினை முன்னிட்டு இச் சேவையில் அதிரடி சலுகையினை பயனர்களுக்கு வழங்க அமேஷான் நிறுவனம் முன்வந்துள்ளது.

அதாவது 0.99 பவுண்ட் செலுத்தி மூன்று மாதங்களுக்கு வரையறையற்ற மியூசிக் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வரையறையற்ற சேவையானது சாதாரண தருணங்களில் மாதாந்தம் 9.99 பவுண்ட்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச் சலுகையினை இன்றைய தினத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்