டீனேஜ் வயதினருக்கு அமேஷான் வழங்கும் சலுகை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகின் மிகப்பெரிய ஒன்லையின் வியாபாரா தளங்களுள் ஒன்றாகத் திகழும் அமேஷானில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

ஆனாலும் இந்த வரையறையினை தற்போது தளர்த்துவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் பெற்றோரின் அனுமதியுடன் டீனேஜ் வயதினர் தமது சொந்த அமேஷான் கணக்கினை உருவாக்கி நேரடியாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

எனினும் இந்த சலுகை 13 தொடக்கம் 17 வயது வரையானவர்களுக்கு மட்டுமே செல்லுபடியானதாகும்.

13 வயதை விடவும் குறைந்தவர்கள் பயன்படுத்த முடியாது.

டீனேஜ் வயதினர் அமேஷான் அப்பிளிக்கேஷனையும் பயன்படுத்த முடியும்.

இவர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும்போது அவர்களின் பெற்றோரின் கைப்பேசி அல்லது மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும்.

இதன் மூலம் அவர்கள் அனுமதி வழங்க முடியும் அல்லது அனுமதி மறுக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்