தென் கொரியாவையும் விட்டு வைக்காத ஆப்பிள் நிறுவனம்!

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
223Shares
223Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இலத்திரனியல் சந்தைகளாக அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விளங்குகின்றன.

இப்படியிருக்கையில் ஏனைய நாடுகளிலும் தனது காலடியைப் பதிக்கும் முயற்சியில் அந் நிறுவனம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.

இதன் வரிசையில் சாம்சுங் நிறுவனத்தின் கோட்டையாகத் திகழும் கொரிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவிலும் காலுன்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோரினை அங்கு திறந்து வைக்கவுள்ளது.

இவ்வாறு ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படுவதனால் அந் நாட்டில் சாம்சுங் மற்றும் ஆப்பிள் தயாரிப்புக்களுக்கிடையில் விற்பனையில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படியிருக்கையில் தனது ஸ்டோரினை எந்த இடத்தில் நிறுவப்போகின்றோம் என்ற தகவலை மிகவும் இரகசியமான முறையில் வைத்திருக்கின்றது ஆப்பிள்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments