கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற 16ஆவது திருக்குறள் மாநாடு

Report Print Yathu in சமூகம்
69Shares
69Shares
lankasrimarket.com

கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 16வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாடு இன்று நிறைவுபெற்றுள்ளது. கிளிநொச்சி தமிழ் சங்க தலைவர் எஸ்.இறைபிள்ளை தலைமையில் நேற்று ஆரம்பமாகிய மாநாடு தொடர்ந்தும் இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கிளிநொச்சியில் தமிழிற்காக உழைத்தவர்கள் மற்றும் தமிழ் முறைப்படி திருமணம் செய்தவர்கள், சிறந்த சேவகர்கள் உள்ளிட்டவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்