முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை

Report Print Theesan in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியா குட்செட் வீதியிலுள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.

குறித்த ஆலய பிரதமகுருவின் தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த பிரார்த்தனை நடைபெற்றுள்ளதுடன், இதன்போது நெய் தீபம் ஏற்றி வழிபாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிராத்தனையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதரலிங்கம், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்