மலையகத்தில் களைகட்டிய புதுவருட கொண்டாட்டங்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்
0Shares
0Shares
lankasri.com

தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மலர்ந்திருக்கும் புதுவருடத்தை மிக மகிழ்ச்சிகரமாக ஆலய வழிபாடுகளுடன் வீட்டு வழிபாடுகளையும் நடத்தி கொண்டாடினார்கள்.

பெருந்தோட்ட பகுதி ஆலயங்கள் மற்றும் நகர்புற ஆலயங்களில் மருத்துநீர் பெற்று சுபவேளையில் தலையில் தேய்த்து குளித்து இன்றைய தினம் புத்தாண்டு தினத்திற்குரிய நிறத்திற்கு ஏற்ற புத்தாடையை அணிந்து ஆலய வழிபாடுகளிலும். ஏனைய சமய வழிபாடுகளிலும் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

புத்தாண்டை முன்னிட்டு ஹற்றன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் இன்று பாலசுப்பிரமணிய சர்மா குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்