அவசரகால நிலைமையால் கொழும்பு பங்குச் சந்தையில் பாதிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதாக பங்குச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை பெறுவதில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த வாரமளவில் பங்குப் பரிவர்தனை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என்றும் கொழும்பு பங்குச் சந்தை தரப்பினர் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்