இரண்டாவது நாளாகவும் புனரமைக்கப்படும் சாந்தபுரம் பிரதான வீதி

Report Print Yathu in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாந்தபுரம் கிராமத்தின் பிரதான வீதி இன்று இரண்டாவது நாளாகவும் மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் பொய்யான நிலையில் கிராம மக்களால் குறித்த வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

1000 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயணிக்கும் இந்த வீதியை திருத்தம் செய்து தருமாறு மக்களால் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு அபிவிருத்தியும் செய்யப்படாத வீதி 400இற்கும் மேற்பட்ட மக்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்