தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மர கண்காட்சி

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாண மரநடுகை மாதத்தினை ஒட்டி நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் மர கண்காட்சி ஒன்று இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

மேலும் குறித்த நிகழ்வின்போது வடமாகாண அமைச்சர் க.சிவனேசன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்