கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர் உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

குவைத் நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இந்தியர் உயிரிழந்துள்ளார்.

விமானம் தரையிறக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதன் முருகன் என்ற 52 வயதான இந்தியரே குவைத்தில் இருந்து வந்த யு.எல் 230 என்ற விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

advertisement

பயணிக்கு சுகவீனம் ஏற்பட்டதையடுத்து விமான சிப்பந்திகள் மூன்று மணிநேரம் ஒக்சிஜன் வழங்கியுள்ளனர். அருகில் உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கிய பின்னர், அங்கிருந்து மூன்று மணிநேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி விமானம் பறந்துள்ளது.

குவைத்தில் இருந்து நேரடியாக தமிழ்நாட்டுக்கு விமான பயணச்சீட்டை பெறுவதில் காணப்படும் சிரமம் காரணமாக உயிரிழந்த பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மாற்று விமானத்தில் செல்லும் வகையில் விமான பயணச்சீட்டை பெற்றுள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுவதுடன், மரணம் குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளில் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்