மக்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்த இளையராஜா

Report Print Thuyavan in சினிமா
274Shares
274Shares
lankasrimarket.com

இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவிற்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை என்னை நேரிலும், தொலைபேசிவாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது.

ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும் மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன்.

அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்