தென்னிந்திய திரையுலகத்தினரின் அதிர்ச்சியான அறிவிப்பு

Report Print Kabilan in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மாநில திரையுலகமும் இணைந்து, வருகிற மார்ச் 1ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம், தெலுங்கு திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு ஜி.எஸ்.டி வரி, தியேட்டர் கட்டண உயர்வு, கியூப் கட்டண உயர்வு போன்ற பிரச்சனைகளை, அரசு சரி செய்யும் வரை புதிய படங்களை தயாரிப்பதில்லை மற்றும் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்தது.

இது குறித்து, மற்ற மாநில திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்திலும், இது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதேபோல கேரளா, கர்நாடகா மாநில திரைப்பட சங்கங்களும், இந்த விடயம் தொடர்பாக விவாதித்துள்ளன. இந்நிலையில், தெலுங்கு திரையுலகினர் நடத்த உள்ள போராட்டத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மூன்று திரையுலகினரும் கலந்து இருப்பதாகவும்,

இந்த போராட்டம் வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்