மொன்றியலில் சம்பவம்: 50 வாகனங்கள் குவிந்த விபத்தில் ஒருவர் மரணம்

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

மொன்றியலில் புதன்கிழமை இடம்பெற்ற 50 வாகனங்கள் குவிந்ததால் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதுடன் 15-பேர்கள் வரை காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டித்த பனிப்பொழிவினால் மொன்றியல் நெடுஞ்சாலை ஸ்தம்பித்த காரணத்தால் வாகனங்கள் குவிந்ததாக அறியப்படுகின்றது.

பிற்பகல் 1மணியளவில் விபத்து நடந்துள்ளது.நெடுஞ்சாலை 20ல் கியுபெக்கிற்கு வெளியே நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து டிரக்குகள் மற்றும் வாகனங்கள் வீதியில் ஒன்றின் மேல் ஒன்று மோதிய நிலையில் விபத்திற்குள்ளாகின. இக்குவியலில் மதிப்பீடு ஒன்றின் பிரகாரம் 50வாகனங்கள் அகப்பட்டு கொண்டதாக கூறப்படுகின்றது.

பறக்கும் பனியினால் ஏற்பட்ட தெளிவற்ற பார்வை நிலை விபத்திற்கு காரணமான அமைந்துள்ளது.

மரணமடைந்த மனிதனின் வயது70.

மொன்றியலை நோக்கி செல்லும் பிரதான வீதயில் விபத்து நடந்ததால் மாலை 6மணிவரை மூடப்பட்டிருந்தது.

விபத்திற்குள்ளான வாகனங்களில் பெண் சாரதிகளும் இருந்துள்ளனர்.

பேரூந்துகள் வரவழைக்கப்பட்டு வாகனத்திற்குள் அகப்பட்டவர்களிற்கு உதவப்பட்டது.

காலநிலை விபத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்