ஒரு காலத்தில் அவர்கள் எங்களை நேசித்தார்கள்: அமெரிக்கா பற்றி கனடா

Report Print Trinity in கனடா
292Shares
292Shares
lankasrimarket.com

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி காலப் நிறுவனம் எடுத்த கருத்து கணிப்பில் 94 சதவிகித அமெரிக்கர்கள் கனடிய நாட்டை பற்றி நேர்மறையாக கூறியிருந்தார்கள்.

வடகொரியாவை பற்றியோ ஆறு சதவிகிதம் மக்களே சாதகமாக கூறியிருந்தனர்.

ஆனால் இவையெல்லாம் ஜி7 மாநாடு தொடங்குவதற்கு முன் . அதற்குப்பின் ட்ரம்ப் வெளியிட்ட அதிருப்தியான ட்வீட் தற்போது இந்த கருத்து கணிப்பு அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

கடந்த புதனன்று வேறொரு அமெரிக்க நிறுவனம் எடுத்த கருத்து கணிப்பில் வெறும் 66 சதவிகித அமெரிக்கர்கள் தான் கனடாவை பற்றி நல்லவிதமாக கூறியிருக்கின்றனர்.

ட்ரம்பின் டிவீட்கள் நாட்டின் முடிவுகளை தீர்மானிக்காது என்று நாம் இதனை அலட்சியப்படுத்திவிட முடியாது காரணம் அமெரிக்கர்கள் தங்கள் ஜனாதிபதி வழிநடத்தும் அதே வழியில் கடமை உணர்வோடு நடப்பார்கள்.

இந்த பொதுமக்கள் கொள்கை வாக்குப்பதிவின் கருத்து கணிப்பு ஆய்வாளர் ஜிம் வில்லியம்ஸ் கூறுகையில் இது நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

2016 ட்ரம்ப் பதவி ஏற்பதற்குமுன் விளாடிமிர் புதினை அமெரிக்கர்களுக்கு பிடிக்காது. ஆனால் ட்ரம்ப் பதவியேற்றபிறகு அவருக்கும் பிடித்தவர் என்பதால் புதின் அமெரிக்கர்களுக்கு பிடித்தவராக மாறிப்போனார்.

ஆனால் இந்த கருத்து கணிப்பில் ஆச்சரியப்படத்தக்க மாற்றம் என்னவென்றால் கடந்த வருடம் ஜூன் மாதம் இதே நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட கருத்து கணிப்பில் அனைவருக்கும் பிடித்த பிரதான தேசிய தலைவராக அமெரிக்க அதிபர் ட்ரம்பை விட ஜஸ்டின் ட்ரூடோ தான் இருந்தார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது என்கிறார் ஜிம்.

கனடா அதிபர் ஜஸ்டின் வர்த்தக ரீதியாக தனது முதுகில் குத்தி விட்டதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது ஒரு தவறான வார்த்தை பிரயோகம். இருப்பினும் ட்ரம்ப் மற்றும் அவரது ஊழியர்கள் திரும்ப திரும்ப இதனையே அடிக்கடி தலைப்பு செய்திகளாக்குவதன் மூலம் அவர்கள் நினைத்ததை சாதித்து விடுவார்கள்.

ட்ரம்ப் ஒரு மிக சிறந்த விற்பனையாளர் என்பதால் தனது எண்ணங்களை மக்களின் அடி மனதில் போய் சேரும்வரை மூளைச்சலவை செய்ய அவரால் முடிகிறது. ஆகவேதான் நேற்றுவரை எதிரியாயிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தற்போது மிக நல்லவராகவும் தனது மக்களை நேசிக்கின்ற மனிதனாகவும் அமெரிக்கர்கள் மனதில் தற்போது இடம்பெற்று இருக்கின்றனர்.

இதன் மூலம் ட்ரம்ப் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் தலைகீழாக மாற்ற முடியும் என்பது மேற்கண்ட தெள்ள தெளிவாகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்