கனடா பிரதமரை அச்சுறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை

Report Print Athavan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா பிரதமர்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய 2 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடா பிரதமர், Medicine Hat நகர் மேயர் மற்றும் பல அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பிய வில்லியம் பென்ஹாம்(வயது 52) ஜனவரி மாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவர் மீது பொதுசொத்துகளை சேதப்படுத்துதல், மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் மட்டுமே பேசியுள்ளார், ஆனால் அவற்றை செயல்படுத்தும் நோக்கமோ அல்லது திட்டமோ எதுவும் இல்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் Medicine Hat நீதிமன்றம் 2 வருடம் சிறைத்தண்டனை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின் படி, அவர் மிரட்டல் விடுத்த எந்தவொரு நபருடனும் நேரடியாக தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மது மற்றும் போதைபொருட்களுக்கு பென்ஹாம் அடிமையாகி உள்ளதால், அதிலிருந்து மீள உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்