சர்ச்சையில் சிக்கிய கனடா பிரதமர்

Report Print Athavan in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

பொதுமக்களுடனான நிகழ்ச்சியின் போது இளம்பெண் கூறிய வார்த்தையை கனடா பிரதமர் திருத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை டவுன் ஹாலில் பொதுமக்களுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துரையாடினார்.

அப்போது, இளம் பெண் ஒருவர் எழுந்து ஜஸ்டின் ட்ரூடே அமைச்சரவையில் பாலின சமநிலைக்கு ஏற்ப அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பிரதமரை புகழ்ந்தார்.

கொரிய தேவாலயத்தில் தாம் உறுப்பினராக இருந்து சேவை செய்வதை குறிப்பிட்டு, நாட்டின் பொருளாதாரம் பெண்களால் நிரம்பியிருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர் தன்னார்வ மற்றும் மத அமைப்புகளின் கொள்கை பற்றி பிரதமரின் பார்வை எவ்வாறு உள்ளது என்று கேட்டார்.

இறுதியாக இந்த இளம் பெண், "தாயின் அன்பு தான் மனிதனின் எதிர்காலத்தை மாற்ற போகும் சக்தி” என்றார்.

அப்போது கையசைத்து இடைமறித்த பிரதமர் ”மனிதனின் எதிர்காலம் என்பதை விட மக்களின் எதிர்காலம் என்று மாற்றி சொல்லுங்கள்” என்றார், அவரும் ஆமாம் சரி என்று அவ்வாறே மாற்றி கூறினார்.


இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுஇடத்தில் பேசும் போது நாகரிகம் கருதி பிரதமர் அவ்வாறு செய்திருக்க கூடாது என பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனை தொடர்ந்து கன்சர்வேடிவ் ஃபெடரல் கட்சியை சேர்ந்த மைக்கேல் ரெம்பல் பிரதமரால் குறுக்கீடுசெய்யப்பட்ட பெண்மணியிடம் மன்னிப்பும் கேட்டார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்