கனடாவில் தொழில் பெற்று தருவதாக கூறி இலட்சக்கணக்கில் ஏமாற்றிய பெண்

Report Print Vethu Vethu in கனடா
74Shares
74Shares
lankasrimarket.com

கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இலட்சக்கணக்கில் பணம் மோசடி செய்து வந்த குழுவின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் போன்று செயற்பட்டு இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடா செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு விசா வந்துள்ளதாக போலி ஆவணங்களை காட்டி இந்த குழு இளைஞர் யுவதிகளிடம் லட்ச கணக்கில் பணம் பறித்துள்ளது.

இவ்வாறு பணம் மோசடி செய்வதற்காக நாடு முழுவதும் பெண்கள் குழுவொன்று செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனோமா என்ற பெண்ணே இந்த குழுவின் பிரதான நபராக செயற்பட்டுள்ளார். அவர் மறைவான வாழ்க்கை ஒன்றையே வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இந்த பெண் எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியே வந்து செயற்படாமல் நபர்களை வைத்தே இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த குழுவின் இரண்டு பெண்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த அனோமா நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று இந்த மோசடியை தொடர்ந்துள்ளார்.

அவரது தொலைபேசியை பதிவு செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதற்கமைய நேற்று மேலும் 10 லட்சம் பணம் மோசடி செய்வதற்கு ஆயத்தமாகிய போது மினுவங்கொட பிரதேசத்தில் வைத்து அனோமாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரை கைது செய்யும் போது அவரது பிரதிநிதிகள் சிலரும் அந்த இடத்தில் இருந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவரது வீட்டை சோதனையிட்ட போது அவரால் ஏமாற்றப்பட்ட பலரது கடவுசீட்டுகள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்