கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில்

Report Print Ramya in கனடா
0Shares
0Shares
lankasri.com
advertisement

கனேடிய குடியுரிமை பெற்ற மூன்று இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு கடத்தப்படவுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர்கள் இன்றைய தினம் கனடாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

advertisement

வெளிநாட்டில் இருந்து தொழில் அதிபர்களின் கடன் அட்டைகளை போன்று போலிகளை தயாரித்து கடன் அட்டை மோசடியில் குறித்த இலங்கையர்கள் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு இந்திய சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது குறித்த இலங்கையர்களின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளமையால் அவர்கள் இன்றைய தினம் கனடாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரகாஷ், சுகந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோரே இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் குறித்த இலங்கையர்கள் இன்றைய தினம் கனடாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments