இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கடந்த வருடமே அதிகம்

Report Print Jeslin Jeslin in வர்த்தகம்
0Shares
0Shares
lankasri.com

இலங்கை, கடந்த ஆண்டில 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றிருப்பதாக இலங்கை முதலீட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை முதலீட்டுச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 802 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருந்தன. கடந்த ஆண்டு இது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கிடைத்ததே , இதுவரையில் ஒரு ஆண்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடாகும்.

இதுவரையில், 2014ஆம் ஆண்டு கிடைத்த ஆகக் கூடுதல் வெளிநாட்டு நேரடி முதலீடான 1.61 பில்லியன் டொலரையும் இது தாண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்