ஒரே மாதத்தில் முகம் இப்படி மாறணுமா?

Report Print Fathima Fathima in அழகு
288Shares
288Shares
lankasrimarket.com

பருவ வயதை அடையும் போது ஹார்மோன் மாற்றங்களால் பருக்கள் வருவது இயல்புதான், ஆனால் சிலருக்கு பருக்களின் தழும்புகள் இருந்து முகத்தை வீணாக்கிவிடும்.

இதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்தி தற்காலிகமாக தீர்வு கண்டாலும் பின்விளைவுகளும் ஏற்படும் அபாயமும் உண்டு.

எனவே வீட்டிலிருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டே பருக்களையும், அதன் தழும்புகளையும் நீக்கலாம்.

  • வெந்தயக்கீரை இலைகளை மைப்போல அரைத்துக்கொண்டு, முகத்தில் பூசிக் கொள்ளவும், 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் பலன் உண்டு.
  • ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்கள் உள்ள இடத்தில் மசாஜ் செய்யலாம்.
  • கற்றாழை இலையை கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியாக எடுத்துவிடுங்கள், இந்த சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து வரவும்.
  • கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, நல்ல தண்ணீர் கொண்டு கழுவவும், தொடர்ச்சியாக இதை செய்து வந்தால் தழும்புகள் மறையும்.
  • உருளைக்கிழங்கை நன்றாக அரைத்துக் கொண்டு முகத்தில் தடவி காயும் வரை காத்திருந்து, தண்ணீர் கொண்டு கழுவவும்.
  • இதேபோன்று தக்காளி அரைத்து முகத்தில் தடவலாம், அல்லது தக்காளி சாற்றை ப்ரீசரில் வைத்து ஐஸ்கட்டி போன்று வந்தவுடன் முகத்தில் மசாஜ் செய்யலாம்.
  • தினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தாலே நல்ல பலனை பெறலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்