ஒரு வாரத்தில் வெள்ளையாகலாம்: இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Deepthi Deepthi in அழகு
539Shares
539Shares
lankasrimarket.com

மாசடைந்த சுற்றுச்சூழல், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், தூக்கமின்மை போன்ற காரணங்களால் சருமத்தின் நிறம் மாறுபடும்.

இப்படி மாறுபட்டு கிடக்கும் சருமத்தின் நிறத்தை மாற்ற பல்வேறு க்ரீம்கள் இருந்தாலும், அதில் கலந்திருக்கும் வேதிப்பொருட்களால் முக அழகு பாதிப்படையும்.

எனவே, இயற்கை வழியில் சருமத்தை வெள்ளையாக்க இதோ டிப்ஸ், இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

அரிசி மாவு மற்றும் பால் பேஸ் பேக்

அரிசி மாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும், மென்மையாக்கவும் செய்யும். பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்

பால் -2-3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அக்கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்