கைவிரல் மூட்டுகள் கருமையா? எளிய வழி இருக்கு

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

சூரியக் கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணமாக கைவிரல் மூட்டுகளில் கருமை நிறம் அதிகமாக இருக்கும். அந்த கருமையை போக்க ஒரு எளிய வழி இதோ,

கைவிரல் மூட்டில் உள்ள கருமை போக்கும் வழி
  • தேன், எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, அதை கைவிரல் மூட்டுக்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, நீரில் கழுவ வேண்டும்.
  • 3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், 2 டீஸ்பூன் சர்க்கரை கலந்து, அதை கைவிரல் மூட்டுக்களில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, நீரில் கழுவி கைகளுக்கு லேசாக மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
  • பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி ஆயில் ஆகியவற்றில் 1/2 டீஸ்பூன் அளவு மற்றும் 3 சொட்டுக்கள் எலுமிச்சை சாறு ஆகிய அனைத்தையும் கலந்து கை விரல் நகங்கள் மற்றும் கைவிரல் மூட்டுக்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
  • 1 டீஸ்பூன் மில்க் க்ரீம், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, தேய்த்து கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்