பரு தொல்லையா?அப்ப இதை செய்து பாருங்கள்

Report Print Kavitha in அழகு
132Shares
132Shares
lankasrimarket.com

பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன.

உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வர காரணமாகவுள்ளது.

அதிகப்படியான ஹார்மோன் சுரப்பு பரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தலையில் அதிகப்படியான பொடுகு இருந்தாலும் முகப்பரு வர வாய்ப்புண்டு.

இதனை தடுப்பதற்காக நாம் நவீன முறையிலான பேசியல் கிரீம்களை பயன்படுத்துவதனால் பருக்கள் அதிகமாவதோடு குறையாது.

இதற்காக நாம் நேரத்தை செலவழிக்க தேவையில்லை. வீட்டிலே பருக்களை தடுப்பதற்கான எளியமுறைகளை மேற்கொள்ளுவோம்.

அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும்.இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

குப்பைமேனிக் கீரையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும்.

நுங்கு நீரை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவிவர வேண்டும். பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் காணமற் போகும்.

வினிகர் மற்றும் உப்பை கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைத்து வந்தால் பருக்கள் நாளடைவில் குறைய வாய்ப்புண்டு.

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போட்டு வர விரைவில் பருக்கள் ஏற்பட்ட வடுக்கள் மறைய உதவுகிறது.

இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.

முகப்பருவை கிள்ளுவதால் ஏற்பட்ட கரும்புள்ளிகளுக்கு ஜாதிக்காய் ஒன்றை எடுத்து அதில் தேங்காய்ப்பால் சிறிதளவு விட்டு இரவில் படுக்கும் போது தடவி வர வேண்டும் இவ்வாறு தினமும் செய்வதனால் கரும்புள்ளிகள் மறையும்.


வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொண்டு. பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி15 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் வேண்டும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர முகத்தில் உள்ள வடுக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்