நீங்க எந்த ராசி? இந்த பரிகாரத்தை செய்திடுங்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1181Shares
1181Shares
lankasrimarket.com

இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய 12 ராசிக்காரர்களுமே செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

இந்த ராசிக்காரர்கள் அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகப் பெருமானை தினமும் வணங்கி வருவதால் சிரமங்கள் அனைத்தும் குறைந்து சிறப்பான வாழ்க்கை அமையும்.

ரிஷபம்

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் அஷ்டம சனியின் பாதிப்புகள் குறைந்து சுபிட்சங்கள் ஏற்படும்.

மிதுனம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு மலையில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவதன் மூலம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கடகம்

மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபாடு செய்வதால், அனைத்து விதமான சுப பலன்களும் கிடைக்கும்.

சிம்மம்

அவினாசிக்கு அருகில் உள்ள திருமுருகன் பூண்டி தலத்தில் உள்ள சிவபெருமானையும், முருகப்பெருமானையும் தீபமேற்றி வழிபட்டு, பின்னர் சிவன் கோயிலுக்குப் பின்புறம் உள்ள கேது பகவான் கோயிலுக்கு சென்று, கொள்ளு பரப்பி, தீபமேற்றி, பால் அபிஷேகம் செய்து, தேங்காய், பழம் வைத்து அர்ச்சித்து, அர்ச்சகருக்கு கொள்ளு தானம் செய்வதன் மூலம் சுபபலன்கள் அனைத்தையும் பெறலாம்.

கன்னி

கன்னிமார்கள் என்று சொல்லக்கூடிய சப்த மாதர்களை வழிபாடு செய்வதன் பொருட்டு அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். மேலும், வெள்ளிக்கிழமை அன்று மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு, ரவிக்கை, வளையல் போன்ற மங்கள பொருட்களை கன்னிமார்களுக்குப் படைத்து, 9 சுமங்கலிகளுக்குக் கொடுத்து ஆசி பெறுவதால் நன்மைகள் அனைத்தும் அடையலாம்.

துலாம்

நளமகாராஜாவுக்கு வாழ்வு கொடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரையும், சனிபகவானையும் வழிபட்டு வருவதன் மூலம் வாழ்க்கையில் பல திருப்பமான சுப முன்னேற்றங்களைப் பெறலாம்.

விருச்சிகம்

அவினாசியில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சிவன், அம்பாள் ஆகியோரை முறைப்படி தீபம் ஏற்றி வழிபடுதல் வேண்டும். மேலும், பறவைகளுக்கு ஒரு தொட்டியில் நீர் வைப்பது, உணவு இடுவது ஆகியவை சுப பலன்களை பெருகச் செய்யும்.

தனுசு

ஜென்ம சனி நடைபெற்று வரும் இந்தக் காலத்தில் சிவாலயங்களில் உள்ள காலபைரவரை வணங்குவது சிறப்பான பலனைத் தரும். சனிக்கிழமையன்று, ராகு நேரத்தில் பைரவருக்கு தீபமேற்றி வணங்கி வருவது சிறப்பு.

மகரம்

சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவாலயங்களை சுத்தம் செய்து திருவிளக்கேற்ற எண்ணெய் வாங்கித் தருவதன் மூலம் அனைத்து விதமான சுப பலன்களையும் அடையலாம்.

கும்பம்

பத்ரகாளி அம்மனை வெள்ளிக்கிழமை ராகு நேரத்தில் தீபமேற்றி, வழிபட்டு வருவது நன்மைகள் அனைத்தையும் பெருகச் செய்யும். மேலும், ஏதேனும் ஒரு சிவாலயத்திற்கு திருவிளக்கு தானம் செய்வது மிக உயர்ந்த பலன்களை அள்ளித்தரும்.

மீனம்

வியாழக்கிழமை அன்று நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு பொட்டுக்கடலை சர்க்கரையை நைவேத்தியம் செய்து, வழிபாடு செய்வதன் மூலம் சுப பலன்கள் அனைத்தையும் பெறலாம்.

- Dina Mani

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்