உங்களுக்கு பண வரவு எப்படி? மகர சங்கராந்தி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasri.com

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை சங்கராந்தி என்றழைப்பர், மகர சங்கராந்தி என்பது தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்வதை குறிக்கிறது.

தேவர்களுக்குப் பகல் காலமான உத்திராயணத்தின் முதல் நாளான தை மாதம் 01ம் நாள் ஏற்படக்கூடிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மகர சங்கராந்தியின் பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பலன்கள்
 • மகர சங்கராந்தி புருஷ்ன கோரா என்ற பெயர் கொண்டிருப்பதால் அரசாங்கத்தால் நற்பலன்கள் ஏதுமில்லை, தீய குணம் கொண்டவர்கள் அழிவை சந்திப்பார்கள்.
 • கம்பிளி வஸ்திரம் அணிந்திருப்பதால் புது வகையான நோய்கள் தாக்கும், சக்கர ஆயும் இருப்பதாலும், நீலேத்பலம் புஷ்பம் அணிந்திருப்பதாலும் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
 • எனினும் சிவப்பு குடையும், மாணிக்க விசிறியும் கொண்டிருப்பதால் எந்த நோய்கள் உண்டானாலும் உடல் ஆரோக்கியம் சீராகும்.
 • முத்து ஆபரணங்கள் இருப்பதால் கெட்ட நடவடிக்கை கொண்ட பெண்களுக்கு கெடுதி உண்டாகும்.
 • மத்தளத்தை வாத்தியமாக கொண்டிருப்பதால் கலைத்துறையினருக்கு தீய பலன்கள் உண்டாகும்.
 • கிழக்கு திசையிலிருந்து வருவதால் கற்றறிந்த மேலோருக்கு பெருமை உண்டாகும். மேஷம் லக்கினத்தில் உதிப்பதால் தானிய உற்பத்தி பெருகும்.
 • அசுவினி, பரணி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இடம் மாற்றம் உண்டாகும்.
 • கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
 • ஆயில்யம், மகம், பூரம் ஆகிய நட்ச்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் தொல்லை உண்டாகும்.
 • உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்திலிருந்து பரிசு, பட்டம், அனுகூலம் கிடைக்கும்.
 • கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணம் அதிகமாக செலவாகும்.
 • உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்